Monday 12 December 2011

நித்திய நியாயத்தீர்ப்பு


நித்திய நியாயத்தீர்ப்பு

                Eternal judgment



                                     சங் 7:11; தேவன் நீதியுள்ள நியாயாதிபதி
நியாயத்தீர்ப்பின் நோக்கம் :
ஆதாமின் கீழ்படியாமையால் பாவத்திற்கு உட்பட்ட மக்கள் தங்களை தேவ நீதிக்கேற்ப கீழ்படிதலுக்கு உட்படுத்திகொள்ள இயேசு கிறிஸ்து மூலமாய் சந்தர்ப்பத்தையும் வாய்ப்பையும் அளிப்பதே நியாயத்தீர்ப்பின்  நோக்கமாயிருக்கிறது. (ஏசா26:9 ) தேவசித்தமும் இதுவே.
1. திருச்சபை : 
1பேது.4:17-19 : நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே (1தீமோ.3:15) (சபை) துவங்கும் காலமாய் இருக்கிறது. 
1பேது.4:17  முந்தி நம்மிடத்தில் (சபை) தொடங்குகிறது. 
 சுவிஷேசயுகத்தில் தேவ சித்தத்திற்கு ஒப்பு கொடுத்த தேவ சபையில் நியாயத்தீர்ப்பு தொடங்குகிறது. 
 ஏனெனில், 
• இவர்கள் பெற இருக்கும் மகிமைக்கு பாத்திரமானவர்களா என பரிட்சைக்கு உட்படுத்தப்படுவது அவசியமாதால் (1பேது.1:6-7) நியாயத்தீர்ப்பு நடக்கிறது. 
• கிறிஸ்துவின் மூலம் ஆதாமின் பாவத்திற்கு மரித்து, ஜீவனை பெற்றுகொண்ட யாவரும் ஜுவகாலம் முழுவதும் பிழையின்றி ஓட வேண்டும். 

            நீதி 6:16 -19;                                                          சங் 50:5 
ஒட்டத்தில் தகுதியற்றவர்களாகவும்        பரிட்சையின் ஒட்டத்தில் ஜெயம்
தேவனுக்கு விரோதமாகவும்           கொண்டவர்களாகவும் பலியினாலே  செய்கிறார்கள்.                                               உடன்படிக்கை பண்ணி தேவ
                                                                         சித்தம் செய்தவர்கள்.

2ஆம் மரணம்                                              முதலாம் உயிர்த்தெழுதல் 
(எபி 6:8; வெளி 21:8)                                   (வெளி 20:6)
                                                                       ஆளுகை  (மத் 19:27-28)

2. உலக ஜனங்கள் 
அப் 17:31  மேலும் ஓரு நாளைக்  குறித்திருக்கிறார். 2பேது.3:8; அதிலே அவர் தாம் நியமித்த மனுஷனைக் கொண்டு பூலோகத்தை நீதியாய் நியாயம் தீர்ப்பார். 
 1000 வருட அரசாட்சி காலப்பகுதியே  இவர்களுக்கு நியாயத்தீர்ப்பு காலமாகும் .

பிர.3:17;  சகல எண்ணங்களையும், சகல செய்கைகளையும் நியாயம் தீர்க்கும் காலம்”, இனி இருக்கிறபடியால் .
பிர 12:14 : ஒவ்வொரு கிரியையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும், தீமையானாலும் தேவன் நியாயத்திலே கொண்டு வருவார்.
வெளி.22:7; இதோ சீக்கிரமாய் வருகிறேன் , என்ற படி நியாயத்தீர்ப்பு சீக்கிரமாக வரப்போகிறது.
சங்.7:11   தேவன் நியாயாதிபதி 
யோவா.5:22;நியாயத்தீர்ப்பு செய்யும் அதிகாரத்தைபிதா குமாரனுக்கு கொடுத்திருக்கிறார்  வெளி.20:4 :  குமாரன் பரிசுத்தவான்களுக்கு அதிகாரம் கொடுக்கிறார்.
யோவா.12:48;தேவ வசனமே நியாயம் தீர்க்கும்.
 
ஏசா 26:9 : உமது நியாயத்தீர்ப்புகள் பூமியில் நடக்கும் போது பூச்சக்கரத்து குடிகள் நீதியை கற்று கொள்வார்கள். 
1000 வருட அரசாட்சியின் காலம் தண்டனையின் காலமாகயிராமல் நீதியினை கற்றுகொள்ளும் கிருபையின் காலமாகவே உள்ளது.

ஏசா 65:20 : ஒவ்வொரு மனிதனுக்கும் கிருபையின் காலமாக 100 ஆண்டுகள் கொடுக்கப்படுகிறது. 
தாங்கள் பெற்ற ஜுவனை இழந்து போகாமல் இருக்க யோவா.17:3--ன்படி பிதாவையும், குமாரனையும் அறிந்து கொள்ள வேண்டும்.

தங்களுக்கு கொடுக்கப்பட்ட கிருபையின்                    கிருபையின் காலத்தில் 
காலத்தை அசட்டை செய்து நீதியை                           நீதியை கற்று கொண்டு     கற்று கொள்ளாதவர்கள். ஏசா 26:10                                                  தங்களை  படிப்படியாக  
                                                                                               தேவனுக்கு உகந்தவர்களாக்கி 
                                                                                                கொண்டவர்கள்.

2ஆம் மரணம்                                                                         நித்திய ஜுவன் 
மத் 13:37-40 
ஏரே 31:29-30                                                                         (பூமியில் நித்திய காலத்திற்கு ஏசா 65:20                                                                              வாழ்வார்கள்).

3. தூதர்களின் நியாயத்தீர்ப்பு 
1000 வருட அரசாட்சியில் தேவ தூதர்களும் நியாயம் தீர்க்கப்படுவார்கள்.

1கொரி. 6:3 தேவ தூதர்களையும் நியாயம் தீர்பார்களென்று அறியீர்களா? 
 இந்த தேவதூதர்கள் யார்?

யூதா.1:6:       1. தங்களுடைய ஆதி மேன்மையை காத்துக்கொள்ளாதவர்கள்.  
                     2. தங்களுக்குரிய வாசஸ்தலத்தை விட்டுவிட்ட தூதர்கள். 
                     3. நோவாவின் காலத்தில் பாவம் செய்த தூதர்கள்.
                         (அந்த கார சங்கிலி- ஒளியின் கிரிகை செய்ய முடியாதபடி)
                     4. தேவன் நீடிய பொறுமையோடு காத்திருந்தபோது கீழ்படியாமல்         போனவைகள்.1பேது.3:20;(ஆதி 6:2)

1பேது 3:19; தேவன் இவர்களையும் சீருக்கு கொண்டு வர தேவன் சித்தமுள்ளவராய் இருந்தபடியால்தான் இயேசு இந்த ஆவிகளிடம் போய் பிரசங்கித்தார். 
 ஏனெனில்,நியாயத்தீர்ப்பு என்பது சீருக்கு கொண்டு வரவும்,நீதியை கற்றுக் கொடுக்கும் காலம்.

                                 நியாயத்தீர்ப்பு நாள் (The Day of Judgement) 
                                                                        (or) 
                                    ஆயிரவருட அரசாட்சி (Thousand Years Regn) 

1000 வருட அரசாட்சி என்றால் என்ன? 
சகலத்தையும் முற்சீருக்குக் கொண்டு வந்து ஆதாமில் இழந்து போனதை திரும்பக் கொடுப்பதே.

அரசாட்சி   செய்வது யார்? (or)நியாயம்  தீர்ப்பது யார்?
தேவனே நீதியுள்ள நியாயாதிபதி (சங்.7:11)
 

நியாயாதிபதியாகிய தேவன் நியாயத்தீர்ப்பு செய்யாமல் நியாயத்தீர்ப்பு செய்யும் அதிகாரத்தை குமாரனுக்கு கொடுத்திருக்கிறார். யோவா.5:22; அப்.17:31;
அவரோடே கூட பாடுகளை சகித்தோமானால் அவரோடே கூட ஆளுகையும் செய்வோம். 2தீமோ 2:12 ;     
இயேசு கிறிஸ்துவோடும் கூட அவருடைய     மணவாட்டிகளாகிய 1,44,000 பேரும் 1000 வருடம்  அரசாட்சி செய்வார்கள். (வெளி 20:4) 
 உன்னதமானவருயை பரிசுத்தவான்கள் இராஜரிகத்தைப்  பெற்று என்றென்றைக்கும் உள்ள சதா காலங்களிலும்  இராஜ்யத்தை சுதந்தரித்து கொள்வார்கள். தானி 7:18; 
7:13;7:14;   வானத்தின் கீழெங்குமுள்ள இராஜ்யங்களின்    இராஜரிகமும ஆளுகையும் மகத்துவமும்     உன்னதமானவருடைய பரிசுத்தவான்களுக்கே    கொடுக்கப்படும். வெளி 7:27 ;  பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயம் தீர்ப்பார்கள். 1கொரி. 6:2;

1000 வருட அரசாட்சி நடக்கும் போது சாத்தான் இருப்பானா? (or) தொடங்கும் போது என்ன நடக்கும்?
வெளி 20:2 ;  சாத்தானை ஆயிரம் வருஷமளவும் கட்டி வைத்து அந்த 1000 வருஷம் நிறைவேறும் வரைக்கும் அது ஜனங்களை மோசம் போக்காதபடிக்கு அதை பாதாளத்திலே தள்ளி அடைத்து , அதின் மேல் முத்திரை போட்டான்.
சாத்தான் கட்டபட்டு அதாவது செயல் இழந்த நிலையில் இருப்பான்.ஏனெனில் ஜனங்களை மோசம் போக்காதபடி
வெளி 20:6 –  அந்த 1000 வருஷம் முடியும் போது சாத்தான் தன் காவலிலிருந்து விடுதலையாகி.  …
நியாயம் தீர்க்கப்படுவோர் யார்?
வெளி 20:11-13 
1. ஆதாம் முதல் இயேசுவின் பிறப்பு வரை இருந்த பழைய ஏற்பாட்டு காலங்களில், அநேக ஜாதிகளை மக்கள் மெய்தேவனைக்குறித்து அறியாதவர்களாய் தங்கள் அஞ்ஞானத்திலே மரித்து போனவர்கள். 
2. புதிய ஏற்பாட்டுக்குரிய இக்காலத்திலும் , அநேகர் மெய் சத்தியத்தை அறிந்து கொள்ள கூடாதவர்களாய் பலவித மனக்குழப்பங்களால் மதி மயங்கி செத்துக் கொண்டிருக்கிறவர்கள். 
3. வேத பிரமாணங்களை பெற்ற இஸ்ரயேலரும் இயேசுவைப்பற்றிய விஷயத்தில் மனக்கடினமுள்ளவர்களாகவே மரித்தவர்கள். 
இப்பிரபஞ்சத்தின் சத்தான் இவர்களுடைய மனக்கண்களை குருடாக்கி போட்டான்.      (2கொரி. 4:4)
1கொரி.15:22;  ஆதாமுக்குள் மரித்த எல்லோரும்”; கிறிஸ்துவுகுள்    உயிர்ப்பிக்கப்படுவார்கள். 
யோவா 5:28 ; பிரேத குழியிலுள்ள அனைவரும்அவருடைய சத்தத்தைக் கேட்கும் காலம் வரும். 
1கொரி.15:23;  அவன் அவன் தன் தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான் என்றபடிஆதாமுக்குள் மரித்த அனைவரும் அவர்அவர் வரிசை படி மாமிச சரீரத்தில் உயிர்ப்பிக்கப்படுவார்கள். 
ஏசா 26:9   1000 வருட அரசாட்சி காலமாகிய நியாயத்தீர்ப்பின் நாளிலே இவகள் அனைவரும் நீதியை (மெய் சத்தியத்தை) கற்று கொள்வார்கள்.

முதன்முதலில் நியாயம் தீர்க்கப்படுவோர் (or) சீர்திருத்தப்படுவோர் யார்?
சகரி.12:7  யூதாவின் கூடாரங்களை முதன்முதல் இரட்சிப்பார்.
12:10-14;  முதன் முதலாக இஸ்ரயேலர் மெய் சத்தியத்தை  கற்று உணர்ந்து தங்கள் செய்த சகல துர்கிரிகையின் நிமித்தம் துக்கித்து இயேசு கிறிஸ்துவின் நிமித்தமாகவும் புலம்புவார்கள்.

சங் 45:16  ஆபிரகாம், ஈசாக்கு இயாக்கோப்பு போன்ற நீதிமான்கள் 1000  வருட அரசாட்சியில் இப்பூமியில் மாமிச தேகத்தில் பிரபுகளாய்  இருந்து முதன்முதலில் இஸ்ரயேல் அனைவரையும் மெய்  சத்தியத்தில் வழிநடத்துவார்கள்.(ஏசா 32:1)
பின்பு?ஏசா 25:6-7  சகல ஜாதி ஜனங்கள் மேலுள்ள முக்காட்டையும் மூடலையும்  அகற்றுவார்கள்.
                                “விருந்துசத்தியமே விருந்தாக கொடுக்கப்படும். 
எவ்வாறெனில்,ஏசா 32:3-4 : அப்பொழுது காண்கிறவர்கள் கண்கள் மங்கலாயிராது  கேட்கிறவர்களின் செவிகள் கவனித்தே இருக்கும்,  பதற்றமுள்ள இருதயம் அறிவை உணர்ந்து கொள்ளும், தொத்துவாயனுடைய நாவு தடையின்றி தெளிவாய் பேசும். 
 இவ்வாறு சகல ஜாதி ஜனங்களும் மெய் தேவனுடைய  சத்தியத்தை  பூரணமாய் அறிந்து கொள்வார்கள். 
 பூமியும் ஏதேன் தேட்டத்தைப்போல சீரடையும்.

1000 வருட அரசாட்சி உலக ஜனங்களுக்கு எப்படிப்பட்ட நாள்?
 

இது பயங்கரமான நாள் அல்ல. 
சங்.98 : 6-9;  சகல ஜனங்களும் சீர்த்திருத்த ஒரு வாய்ப்பு  கொடுக்கப்படுவதாலும், சீர்திருந்தியவர்களுக்கு நித்திய  ஜுவன் கிடைப்பதாலும் அது ஒரு பெரிய ஆசிர்வாதமான நாள்.
 பூமியின் ஜனங்கள் அனைவரும் கெம்பீரித்து பாடக்கடவர்கள் என்று தாவீது தேவ ஆவியினால் ஏவப்பட்டு பாடும் போது எப்பேர்ப்பட்ட சந்தோஷமான நாள் அது.

1000 வருட அரசாட்சி எப்படி பட்ட அரசாட்சி?
ஏசா 11:3-4 : அவர் தமது கண் கண்டபடி நியாயம் தீர்க்காமலும் தமது  காது கேட்டபடி தீர்ப்பு  செய்யாமலும் நீதியின்படி ஏழைகளை  நியாயம் தீர்த்து யதார்த்தத்தின்படி தீர்ப்புச் செய்து பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரை சங்கரிப்பார்.
சங் 72:1-2 : அவர் உம்முடைய ஜனங்களை நீதியோடும் உம்முடைய  ஏழைகளை நியாயத்தோடும் விசாரிப்பார்.
ரோம 2:6 :  தேவன் அவன் அவன் கிரிகைகளுக்குத் தக்கதாய் அவன்  அவனுக்கு பலனளிப்பார். ( வெளி 20:12-13 ; பிரசங்கி 12:14; ) 
 அதாவது முந்திய செயலுக்குரிய தண்டனை வழங்கப்படும்.

சங் 2:9  இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி குயக்கலத்தைப்  போல் அவர்களை உடைத்துப் போடுவீர் என்று சொன்னான்
வெளி 2:26-27 அவன் அவர்களை இருப்புக்கோலால் ஆளுவான்.
சங் 72:4 :  இடுக்கண் செய்கிறவனை நொறுக்குவார். அதிக கண்டிப்போடு நடத்தபடுதலே இருப்புக்கோல் அரசாட்சி  ஆகும்.
1000 வருட அரசாட்சியில் சீர்பட்டவர்களையும் சீர்படாதவர்களையும் எவ்வாறு பிரித்தெடுப்பார்?
மத் 25:31-34 : இயேசு ராஜாவாக சிங்காசனத்தில் வீற்றிருக்கும் 1000 வருட  அரசாட்சியின் காலத்தில் சகல ஜனங்களும் அவரிடத்தில்  கொண்டு வரப்படும்போது, ஒரு மேய்ப்பன் எப்படி மிக எளிதாக  செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும் பிரிப்பானோ  அப்படியே அவர் மிக எளிதாக சீர்ப்பட்டவர்கள்  சீர்படாதவர்கள் என பிரித்து விடுவார்.  மத் 25:41-46 ;
ஆயிர வருஷ காலத்தில் பூமியும் அதன் குடிகளும் எவ்விதம் சீர்ப்பட்டிருப்பார்கள்.?
 ஆதாமின் பாவத்தின் நிமித்தம் சபிக்கப்பட்ட இப்பூமி 1000 வருட அரசாட்சியின் காலத்தில் புதுப்பிக்கப்பட்டு புதிய பூமியாக மாறும்.
சங் 104:30 : நீர் பூமியின் ரூபத்தையும் புதிதாக்குகிறீர்.
ஏசா 35:1-2; 7 : 1. வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து கடுவெளி  களித்து , புஷ்பத்தைப் போல செழிக்கும். 
வெட்டாந்தரை தண்ணீர்தடாகமும் வறண்ட நிலமும்     நீரூற்றுகளுமாகும்.

எசே 36:34-35 : 35. பாழாய்க்கிடந்த இத்தேசம் ஏதேன் தோட்டத்தை  போலாயிற்று.
ஏசா 55:13: முட்செடிக்குப் பதிலாகத் தேவதாரு விருட்சம் முளைக்கும்  காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச்செடி எழும்பும்.
ஏசா 60:13 : என் பாதஸ்தானத்தை  (பாதபடி பூமி) மகிமைப்படுத்துவேன்.
சங் 85:10-12 : கிருபையும் சத்தியமும் ஒன்றை ஒன்று சந்திக்கும் நீதியும்  சமாதானமும் ஒன்றை ஒன்று முத்தம் செய்யும். 
சத்தியம் பூமியிலிருந்து முளைக்கும் நீதி வானத்திலிருந்து தாழ பார்க்கும் யேகோவா நன்மையைத் தருவார். நம்முடைய தேசமும் தன் பலனைக் கொடுக்கும்.

மீகா 4:3-4; அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும் தங்கள்  ஈட்டிகளை அறிவாள்களாகவும் அடிப்பார்கள். ஒரு ஜாதிக்கு  விரோதமாய் மறுஜாதி பட்டயம் எடுப்பதில்லை. இனி அவர்கள்  யுத்தத்தை கற்பதுமில்லை.  (ஏசா 2:4) அவன் அவன்  தன்தன் திராட்சை செடியின் நிழலிலும், தன்தன்  அத்திமரத்தின் நிழலிலும், பயப்டுத்துவார் இல்லாமல்  உட்காருவான்.
சங். 46:9;அவர் பூமியின் கடைமுனை மட்டும் யுத்தங்களை  ஒயப்பண்ணுகிறார். வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்.  இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.
ஓசி 2:18 ; அக்காலத்தில் நான் அவர்களுக்காகக் காட்டு மிருகங்களோடும்  பூமியிலே ஊரும் பிராணிகளோடும், ஒரு உடன்படிக்கை  பண்ணி ….  யுத்தத்தை தேசத்தில் இராதபடிக்கு முறித்து  அவர்களை சுகமாய் படுத்துக்கொண்டிருக்கப் பண்ணுவேன்.
ர் யு வு ரி பே பெ றோம் ஷ ஷ் பூ ரீ  சே ஷே தெளி டெரி
பயப்படாமல் ஒற்றுமையாக இருக்கும்.  
ஏசா 11:6-9 ;அப்பொழுது ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்கும், புலி  வெள்ளாட்டு குட்டியோடே படுத்துக் கொள்ளும், கன்று குட்டியும்  பால சிங்கமும் காளையும் ஒருமித்திருக்கும். ஒரு சிறு பையன்  அவைகளை நடத்துவான். – பசுவும் கரடியும் கூடி மேயும் ,  அவைகளின் குட்டிகள்  ஒருமித்து படுத்துக்கொள்ளும்.

உணவு மாற்றம்
ஏசா 65:25 – சிங்கம் மாட்டைப் போல் வைக்கோல் தின்னும் (மாமிச  உணவு இல்லை) சர்ப்பத்திற்கு மட்டும் மாற்றம் இல்லை. 
 

பயம் தீங்கு இல்லை                                                                                                           பால்குடிக்கும்  குழந்தை விரியம்பாம்பு  வளையின்    மேல் விளையாடும், பால்  மறந்த பிள்ளைகட்டு   விரியன் புற்றிலே தன் கையை  வைக்கும்.  என்    பரிசுத்த பர்வதமெங்கும் தீங்கு  செய்வாருமில்லை.    கேடு செய்வாருமில்லை 
 

சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறது போல பூமி  கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.
வியாதி
ஏசா 33:24 – வியாதிப்பட்டிருக்கிறேன் என்று நகரவாசிகள் சொல்வதில்லை.  அதில் வாசமாயிருக்கிற ஜனத்தின் அக்கிரமம்  மன்னிக்கப்பட்டிருக்கும்.

வயது
சங் 103:5 – கழுகுக்கு சமானமாய் உன் வயது திரும்ப வாழ வயது போலாகும்

ஏசா 65:17-  இதோ நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும்  சிருஷ்டிக்கிறேன். முந்தினவைகள் இனி  நினைக்கப்படுவதுமில்லை. மனதிலே தோன்றுவதுமில்லை.
ஏசா.65:18 –  எருசலேமின் ஜனத்தை மகிழ்ச்சியாகவும் சிருஷ்டிக்கிறேன்.
ஏசா.65:20 -  இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும் தன் நாட்கள் பூரணமாகாத  கிழவனும் உண்டாயிரார்கள். (சங் 103:5)
 

நூறு வயது சென்று மரிக்கிறவனும் வாலிபனென்று  எண்ணப்படுவான். நூறு வயதுள்ளவனாகிய பாவியோ  சபிக்கப்படுவான். விளக்கம் :                                        1000 வருட அரசாட்சியின்  காலத்தில் சகல ஜாதி ஜனங்களும் மெய் சத்தியத்தை அறிந்து கீழ்படிய ஒவ்வொருவருக்கும் தவணையாக 100  வயது கொடுக்கப்படுமென்றும் அந்த 100 வயதிற்குள்ளாக,
 மனப்பூர்வமாய் சீர்திருந்தாவர்கள்                    மனப்பூர்வமாய் சீர்திருந்தியவர்கள்
1. சபிக்கப்படுவார்கள்                                         ஆசிர்வதிக்கப்படுவார்கள். 
2. அதாவது 2ஆம் மரணம்.                                அதாவது நித்திய ஜீவன் 

மனப்பூர்வமாய் சீர்திருந்தி நித்திய ஜுவனை பெற்றவர்கள் எவ்வாறு 
ஆசிர்வதிக்கப்படுவார்கள்?

ஏசா 65:21 – வீடுகளை கட்டி , அவைகளில் குடியிருப்பார்கள். திராட்சை  தோட்டங்களை நாட்டி அவைகளின் கனிகளை புசிப்பார்கள். 
இதன் விளக்கம் 22ஆம் வசனம்  
ஏசா 65:22 – அவர்கள் வீடு கட்டுகிறதும் வேறொருவர் குடியிருக்கிறதும் 
  திராட்சை தோட்டம் அவர்கள் நாட்டுகிறதும் வேறொருவர் கனி  புசிக்கிறதுமில்லை. நான் தெரிந்து கொண்டவர்கள் தங்கள்  கையின் கிரியைகளை நெடுநாளாய் அனுபவிப்பார்கள்.  விருட்சத்தின் நாட்களைப் போல என் ஜனத்தின் நாட்கள்  இருக்கும்.

1 . தன் கையின் பிரயாசத்தை அவன் சாப்பிடுவான். 
2 . அவன் ஆயுசு நாட்கள் நீடித்திருக்கும்.
இதுவே 1000 வருடஅரசாட்சியில் நித்திய ஜுவனை உள்ள மனிதன் பெறும்ஆசிர்வாதம். 
ஏசா 65:23 – அவர்கள் விருதாவாக உழைப்பதில்லை. 
 (அவன் கையிட்டு செய்கிற அனைத்தும் வாய்க்கும்)

ஏசா 65:23 – அவர்கள் துன்பம் உண்டாக பிள்ளை பெறுவதுமில்லை. 
 இன்று இருக்கிற சாபங்கள் அனைத்தும் ஆசிர்வாதமாக  தேவன் மாற்றுகிறார்.
 இவ்வாறு பூமியும் அதில் உள்ள அனைத்து ஜாதி மக்களும் ஆசிர்வதிக்கப்படுவார்கள். (வசனத்தின் கடைசி பகுதி)

ஏசா 65:24 – அவர்கள் கூப்பிடுகிறதுற்கு முன்பே நான் மறு உத்தரவு  கொடுப்பேன்.  அவர்கள் பேசும்  போதே நான் கேட்பேன்.
செப் 3:9 - இன்றைக்கு இருக்கிற பல பாஷைகளை ஒரே பாஷையாக  மாற்றுகிறார். ஏனெனில், ஜனங்களெல்லாமே ஒரு மனப்பட்டு”  அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு, நான் அவர்கள்  பாஷையை சுத்த பாஷையாக மாற பண்ணுவேன். ஏனெனில்  தேவன் கலகத்திற்கு தேவன் அல்ல. (1கொரி. 14:33)எப்படி 
ஒரே பாஷையாக இருந்ததை தானே பல  பாஷைகளாக மாற பண்ணினார். எனவே பல பாஷைகளை ஒரே  பாஷையாக மாற பண்ணுவது அவருக்கு எவ்வளவு சுலபமானது. 
இவ்விதமாய் ஆதாம் மூலம் இழக்கப்பட்ட இப்பரதீசு மீண்டும் இப்பூமியில் ஸ்தாபிக்கப்படும்.

லூக் 19:10 - இழந்து போனதை தேடவும்  இரட்சிக்கவும் மனுஷகுமாரன்  வந்தார்.
இந்த ஆசிர்வாதமான காலத்தை வேதம் வேறு எவ்வாறெல்லாம் கூறியுள்ளது.?
அப் 3:19 – கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்து வரும் இளைப்பாறுதலின்  காலம் 
மத் 19:28- மறுஜென்ம காலம் 
1000 வருட அரசாட்சி என்பது,
பர்வ காலங்களிலிருந்து தேவன் தம்முடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் மூலமாய் முன்னுரைக்கப்பட்ட தேவனின் ராஜ்யம்,இப்பூமியில் ஸ்தாபிக்கப்பட்டு சகல ஜாதி ஜனங்களும் ஒன்றான மெய் தேவனாகிய யேகோவாவையும் அவர் அனுப்பின அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவையும் குறித்து அறிந்து கொள்ளவும்,
அவர்கள் தேவனுடைய திட்டங்களை கைக்கொள்ள செய்ய,
இந்த 1000 வருட அரசாட்சி தெய்வ அதிகாரத்திற்குரிய இருப்புக்கோல் அரசாட்சி ஆகும்.

ஆயிர வருட அரசாட்சி முடிவில் என்ன நடக்கும்?
1. சாத்தான் தன் காவலிலிருந்து  விடுதலையாவான் . வெளி 20:7;
2. சாத்தானும் அவனைச் சேர்ந்த தூதர்களும் அவனைச் சேர்ந்த துன்மார்க்கர்களும்  அக்கினியினாலே சாம்பலாக்கப்படுகின்றனர்.

வெளி 20:7-9 ; இவ்விதமாய் இயேசு கிறிஸ்து தம்முடைய எல்லா  சத்துருக்களையும்
1கொரி. 15:26-28- கடைசியில் சாத்தானையும் மரணத்தையும் அழித்து 
 இப்பூமிக்குரிய ராஜ்யத்தை பிதாவும் தேவனுமாகிய  யேகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து அவருக்கு கீழ்பட்டிருப்பார்.

எபே 1:9-10 ; காலங்கள் நிறைவேறும் போது விளங்கும் நியமத்தின்படி  பரலோகத்திருக்கிறவைகளும்  பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும்  கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்று தேவன்  தமக்குள்ளே தீர்மானித்த இரகசியம் நிறைவேறும்.
கொலோ 1:19,20 – பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்தில்     உள்ளவைகள் யாவையும் இயேசு கிறிஸ்து     மூலமாய் ஒப்புரவாக்கி கொள்ள வேண்டும் என்ற   தேவனுடைய பிரியம்  நிறைவேறும்
யோவா 10:16 – அப்பொழுது ஒரே மந்தையும் ஒரே மேய்ப்பனாக  இருக்கும் என்று இயேசு கூறிய வார்த்தை நிறைவேறும். 
  

இயேசு பிதாவிடம் ராஜ்யத்தை ஒப்புக்கொடுக்கும் போது  எத்தனை தீர்க்கதரிச வார்த்தைகள்   நிறைவேறுகின்றன.இதன்பின் ஏக சக்ராபதியாக யேகோவா தேவனே இருப்பார். “உம்முடைய ராஜ்யம் வருவதாக.
1000 வருட அரசாட்சி முடிந்த பின்னர் வரும் யுகாதி யுகங்கள் எப்படியிருக்கும்?  (or)
யேகோவாவின் ஆட்சி எப்படியிருக்கும்?
இயேசு கிறிஸ்து பிதாவிடம் ஒப்படைத்த அந்த ராஜ்யமானது யேகோவா தேவனுடைய ராஜ்யமாகையால்,அது என்றென்றைக்கும்  உள்ள நித்திய ராஜ்யமாக இருக்கும்.

தானி 7:27- பின்பகுதி அவருடைய ராஜ்யம் நித்திய ராஜ்யம். 
  சகல கர்த்தத்துவங்களும் அவரை சேவித்து அவருக்கு  கீழ்ப்பட்டிருக்கும் என்றான் .

தானி 2:44 …. அந்த ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்
சங் 145:13 … உம்முடைய ராஜ்யம்  அழியாது .அவருடைய கர்த்தத்துவம்முடிவுபரியந்தம் நிற்கும்.
வெளி 21:1-5… 
1. நான் புதிய வானத்தையும், புதிய பூமியையும்  கண்டேன். முந்தினவைகள் யாவும் ஒழிந்து போயின  .முந்தின வானம், பூமி , சமுத்திரம் ஒழிந்துபோயிற்று

2.புதிய எருசலேமாகிய இயேசுகிறிஸ்தும் அவருடைய சரீரமாகிய திருச்சபையாரும் மிகுந்த வல்லமையோடும் அதிகாரத்தோடும் இருப்பார்கள்.
3.யேகோவா தேவனுடைய ராஜ்யத்தில் தான் தேவனுடைய வாசஸ்தலம் மனிதர்களிடம் இருக்கும்.
4. கண்ணீர் யாவும் துடைக்கப்பட்டிருக்கும்,
 மரணம் இல்லை. 
அலருதல் இல்லை.
வருத்தம் இல்லை.
முந்தினவைகள் யாவும் ஒழிந்து போயிருக்கும்.
 
5.சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறவர். 
 “இதோ , நான் சகலத்தையும் புதிதாக்கிறேன். என்றார். 
இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள் . இவைகளை எழுதுஎன்றார்.

ஏசா 65:20 – அற்ப ஆயுசுள்ள பாலகன் இருப்பதில்லை.
சங் 110:3 ; வாலிபரை போன்று யௌவன ஜனமாக குன்றா ஊக்கமும் 
  குன்றா வாலிபமும் , அழகும் கொண்டு விளங்குவார்கள்.

ஏசா 11:6-9 ; துஷ்ட மிருகங்கள் அங்கே இருப்பதில்லை.
ஏசா 2:4 – ஜனங்கள் யுத்தத்தை கற்பதுவுமில்லை.     மீகா 4:3 -4;
எரே 31:34 – எல்லோரும் தேவனைப்பற்றும் அறிவினால்  நிறைந்திருப்பார்கள்.(ஏசா 11:9 ; ஆப 2:14) இதனால் தேவனை அறிந்து கொள் என்று யாரும்  போதிப்பதில்லை.
செப் 3:9 – ஒரே சுத்தமான மொழி இருக்கும்.
ஏசா 65:17-19 ;  சஞ்சலமும் தவிப்பும் இன்றி சந்தோஷமும் மகிழ்ச்சியும்  உடையவர்களாய் இருப்பர். (ஏசா 25:10 ; 51:11; 33:24;)
ஏசா 65:24 : நாம் கூப்பிடுவதற்கு முன்பே மறு உத்தரவு வரும். 
  நாம் நினைப்பதற்கு முன்பே தேவைகள் அனைத்து பூர்த்தி  செய்யப்பட்டிருக்கும்.

செப் 3:9- அனைத்து ஜனங்களும் ஒருமனப்பட்டு ஒரே ராஜாவை  சேவிக்கக்கூடியவர்களாய் இருப்பார்கள்.
சங் 83:17 – யேகோவா என்னும் நாமத்தை உடைய தேவாரீர் ஒருவரே  பூமியனைத்தின் மேலும் உன்னதாமானவர்.
1தீமோ 1:17 – நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனுமுமுள்ள  ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள  தேவனாயிருப்பவருக்கு, கனமும் மகிமையும் சதா  காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்
மத் 6:10 – யேகோவா தேவனுடைய ராஜ்யம் வருவதாக; யேகோவா  தேவனுடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல  இப்பூமியிலேயும் செய்யப்படுவதாக; என்ற வேண்டுதல் புதிய  பூமியில் பரிபூரணமாக நிறைவேறும்.

No comments:

Post a Comment