Monday 10 October 2011

ஆவியானவர் படும்பாடு

 1) அக்கினி,
2) அந்நியபாஷை.

இந்த இரண்டையும் வைத்துக்கொண்டு இவர்கள் செய்யும் அக்கிரமம் சொல்லி முடியாதது.
முதலாவது சபையை பற்றி பார்போம்


சபை சரித்திரத்தின் பிரிவுகள்


சபை சரித்திரத்தை ஆறுபிரிவுகளாக ஆய்வாளர்கள் பிரித்துள்ளார்கள். அதையும் அறிந்துகொள்வது நல்லது.

1. APOSTOLIC CHURCH
அப்போஸ்தலர்களின் கால சபை: கி.பி.30-100 இயேசுகிறிஸ்துவின் உயிர்தெழுதலுக்கு பிறகு இயேசுகிறிஸ்து பரலோகத்திற்கு பரமேறி சென்ற காலத்திலிருந்து - இயேசுவின் சீஷனாகிய அப்போஸ்தலனாகிய யோவானின் மரணம்வரை உள்ள காலம்.

2. PERSECUTED CHURCH

உபத்திரவங்களை அனுபவித்த ஆரம்ப சபைகளின் உபத்திரவ காலம் (கி.பி.100-313) அதை தொடர்ந்து அப்போஸ்தலன் யோவான் மரித்தகாலம் தொடங்கி கான்ஸ்டன்டைன் இராஜா கிறிஸ்தவ சபையின் பொறுப்பெடுத்த காலம்வரை உண்டான கிறிஸ்தவர்களுக்கு ஏற்பட்ட பயங்கர உபத்திரவ காலகட்டங்கள்.

3. IMPERIAL CHURCH
இராஜாக்களின் தலைமையில் இயங்கப்பட்ட சபைகளின் காலம் கி.பி.314-476 தொடங்கி சபைகளின்மேல் ரோமாபுரியின் ஆதிக்கம் வீழ்ச்சியடைந்தகாலம் வரை உள்ள வரலாறு.

4. MEDIEVEL CHURCH
இடைப்பட்ட சபை காலவரலாறு: கி.பி.476-1453 ரோமாபுரியின் ஆதிக்கத்தின் வீழ்ச்சி காலம் தொடங்கி - கான்ஸ்டன்டைன் டிநோபுளும் வீழ்ச்சியுற்றதின் இடைப்பட்ட கால வரலாறு.
5. REFORMED CHURCH
சபைகள் மறுமலர்ச்சி பெற்ற காலம்: கி.பி.1453-1648வரை அதாவது கான்டன்டைன் டிநோபாளின் அரசாட்சி வீழ்ச்சியடைந்த காலத்திலிருந்து அதை தொடர்ந்து நடந்த பயங்கரபோர்முடிய சுமார் 30 வருடங்களானது. அந்த காலங்களில் நடந்த வரலாறு.
6. MODERN CHURCH
நவீன கால சபைகள் கி.பி.1648-1900 வரை அதாவது நடந்துமுடிந்த 30 ஆண்டுகால யுத்தத்திற்கு 19ம் நூற்றூண்டு காலம்வரை உள்ள வரலாறு என்று பிரித்து அதன்பின் ஒவ்வொரு இடைப்பட்ட காலங்களில் சம்பவித்த விஷயங்கள் சபை உபதேசங்களை திருத்திய வரலாறுகள் இவைகளை குறித்த ஆராய்ச்சிகளை ஒன்று சேர்த்துதான் 6 பிரிவுகளாக வேத ஆய்வாளர்கள் பிரித்தனர்.

அந்நியபாஷை குழப்பம் தொடங்கிய வரலாறு

Cross  அந்நியபாஷை என்பது உண்டு. அந்த உண்மையான அந்நிபாஷையை புதிய ஏற்பாட்டு சபைமக்கள் எல்லாரும் பேசும்போது அதைக்கூட பரி.பவுல் அப்போஸ்தலன் கீழ்கண்டவாறு விமர்சிக்கிறார். 1கொரி 14:23 "சபையாரெல்லாரும் ஏகமாய்க்கூடிவந்து, எல்லாரும் அந்நியபாஷைகளிலே பேசிக்கொள்ளும்போது கல்லாதவர்களாவது, அவிசுவாசிகளாவது (சபைக்குள்ளே) பிரவேசித்தால் அவர்கள் உங்களைப் பைத்தியம் பிடித்தவர்களென்பார்களல்லவா?" என்று கூறி கண்டிக்கிறார்.

Cross     பொய்யான அந்நியபாஷை என்ற உபதேசத்தின் இவர்கள் இயேசுவை அறியாத மக்களைக்குறித்தோ, மிக தொலைவில் மலைகளில், காடுகளில் உள்ள ஆதிவாசி மக்களைக்குறித்தோ இவர்களுக்கு தரிசனம் இல்லை. சுலபவழியாக கிறிஸ்தவர்களை - மறுபடியும் கிறிஸ்தவர்களாக்கும் ஊழியத்தையே இப்போதும் தொடர்கின்றனர்.

Cross   அதை தொடர்ந்து  சபைகளில் தீர்க்கதரிசனமும், அற்புதசுகமும் பிரபலமாயின.




அடிப்படை வேதஅறிவு இல்லாத  சபை பாஸ்டர்களின் எண்ணிக்கைதான் இப்போது மிக மிக அதிகமாக காணப்படுகிறது. இவர்கள் நடத்தும் சபைகளில் உள்ள மக்களின் நிலையை நினைத்தால்தான் மிகவும் வேதனையாக இருக்கிறது.
பொதுவாக இப்படிப்பட்ட  சபைகள் நாங்கள்தான் மறுபடியும் பிறந்த அனுபவம் உள்ள இரட்சிக்கப்பட்ட விசுவாசிகள் என்றும் தங்களைத்தான் ஆவிக்குரிய சபைகள் என்பார்கள் என்றெல்லாம் கூறிக்கொள்வார்கள். மற்ற ஸ்தாபன சபைகளை (MAIN LINE CHURCH) பெயர் கிறிஸ்தவசபைகள் என்று இவர்கள் அழைப்பார்கள்.   ஆனால் உயிர்மீட்சி ஆரம்பத்தில் பெந்தேகோஸ்தேசபை பிரசங்கிமார்களால் உண்டாகவில்லை என்பதை இவர்கள் உணரவில்லை.         ஸ்தாபன சபைகளிலிருந்து கன்வென்ஷனில் பேச அழைக்கப்பட்ட பிரசங்கிமார்கள் மூலமாகத்தான் உயிர்மீட்சி உண்டானது என்பதை இவர்கள் மறந்துப்போனார்கள்.   இவர்கள் கைகளில் வைத்துள்ள வேதபுத்தகத்தை மொழிபெயர்த்து கொடுத்த மிஷனரிகள் யாரும் அந்நியபாஷை பேசாதவர்கள் என்பதையும் இவர்கள் மறந்தார்கள். சுவிசேஷத்தை ஆரம்ப விதைகளாக தெளித்து இரத்த சாட்சிகளாக மரித்த ஒரு மிஷனரிகளும் அந்நியபாஷை பேசவில்லை என்பதையம் குறிப்பிடவிரும்புகிறேன்.

 சாட்சியுள்ள வாழ்க்கை மூலமாக கர்த்தரை மகிழச்செய்வோம்.   நமக்குள் என்ன ஆவி உண்டொன்று நம் செயல்கள், கனிகள் கூறட்டும். நிச்சயம் அதன்மூலம் மட்டுமே தேவநாமம் மகிமைப்படும். பக்திவிருத்தியும் உண்டாகும


No comments:

Post a Comment