Wednesday 12 October 2011

ஆவியானவர் வந்தால்

ஆவியானவர் வந்தால் ஆவியானவர் வந்தால் என்ன நடக்கும் என்று நமக்கு தெரிமா?

 தேவ ஜனமே  என்ன நடக்கிறது தெரிமா?

என்ன நடக்கும்

ஆவியானவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார். சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.
பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்தவர்கள் எதனை போதகர்கள்?

என்ன நடக்கிறது?

ஆர்பரிப்பு பாடல் இருந்தால் மட்டுமா ஆவியானவர் வருவாரா?
சுகமளிக மட்டும் தான் வருவாரா ?
முக்கியமாக ஆசீர்வாதம் தர தான் வருவாரா?
இல்லை என்றால் உன்னை கீழே தள்ள தான் வருவாரா ?
என்ன நடக்கிறது?
வாலிபனே நிஐம் தேடி அவியனவருடன் வேதம் காட்டும் வெளிததில் நட நண்பா.

ஆட்டம் பட்டம் ஆசீர்வாதம் உல்லாசம் எல்லாம் நம்பாதே இளைஞனே!!!

ஆட்டம் பட்டம் எல்லாம் என் அப்பா விட்டில் உண்டு ஆணால் அது பிரதானம் அல்ல அல்ல அல்ல...

இளைஞனே!!!
திடப்படுத்தலுக்குப்பின் நீ பலவீனப்படுத்தபடுவது எனக்கு தெரியும்..!!! இராப்போஜனத்திற்க்குப் பின் நீ இரத்த சோகையடைவதும் எனக்கு புரியும்! கிறிஸ்மஸ் வந்தால் சிரிப்பதற்க்கும், லெந்து காலங்களில் அழுவதற்கு மட்டுமே உன்னை ஆயத்தப்படுத்துவார்கள்! தேதி குறித்து உணர்ச்சிகளை உந்திவிட, நீ ஒன்றும் நடிகனல்லவே? பேசிவிடுவாயே என பிரசங்கத் தொட்டிலில் தாலாட்டுவார்கள்; ஏசிவிடுவாயே என பாடகர் குழுவிற்காகபயிற்ச்சியளிப்பார்கள்! அத்தனையும் ஏற்று நீ ஆயத்தமானாலும் உனது உரிமை, ஒப்பாரிவைக்கும் பொழுது ஒதுங்கியே இருப்பார்கள்!! இரு!! இரண்டு கைகளாலும் உன்னை ஆசீர்வதித்துவிட்டு மூன்றாவது கையாக ஒரு உண்டியலையும் நீட்டுவார்கள்! இதைவிட ஒரு பிச்சைகாரனுக்கு நீ பிச்சையிட்டு நீ பெருமிதப்படலாமே!! உண்மையிது! உண்டியல்களின் உள்ளங்கைகளைவிட தொழுநோயாளிகளின் கைகள் தூய்மையானவை! பலமானவனே!! இயேசுவின் பிறப்பின்போது பளபளப்புகளை கண்டு பரவசப்படாதே! கந்தலின் மீதே உன் கவனம் இருக்கட்டும்! அவரது இறப்பின்போது தண்ணீர்ப் பந்தல்களில் தவமிருக்காதே!! கட்டாயச் சோகத்தை கழற்றி எறிந்துவிட்டு அது, உயிர்தெழுதலுக்கான உத்தியென்பதில் உன்னிப்பாக இரு! உன் சுட்டு விரலுக்குள் சூரியன் இருக்கிறது...அதை நீ திருப்பும் திசையெல்லாம் வெளிச்சம் அடிக்குமென விளங்கிக் கொண்டால் போதும்!!!

--jesus--

No comments:

Post a Comment